பிலவ வருடம் வைகாசி மாத ராசி பலன்கள்

வருகிற 14.05.21 வெள்ளிக்கிழமை இரவு 11.24.59 மணிக்கு சூரியன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ரிஷப ராசியில் 15.06.2021 காலை 09.23 மணி வரை சஞ்சாரம் செய்கிறார்.  இது லஹரி அயனாம்ஸபடி பராசர பட்டர் கணிதம் கொண்டு பலன்கள் கணிக்க பட்டு இருக்கிறது.

இந்த கால கட்டத்தில் மற்ற கிரஹ சஞ்சாரங்களையும் கொண்டு வைகாசி மாத பலன்கள் கணிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பு : பொதுவாக எல்லோருக்கும் கவன நாள் சந்திராஷ்டம நாள் தெரியும் அதை வழக்கமாக ஒவ்வொரு ராசிபலன் போதும் கொடுக்கிறோம். அதோடு சில தவிர்க்க வேண்டிய நாள், மற்றும் நல்ல நாள் நம்முடைய அனைத்து முயற்சிகளுக்கும் பொருள் வாங்க வண்டி வாகனம் வாங்க , வேலைக்கு மனுபோட ஆடை வாங்க என்றும் வெளியூர் பயணம் செல்ல என்பது மாதிரி எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு நக்ஷத்திர காரர்களுக்கும் பலன்களின் கீழே கொடுக்க பட்டு உள்ளது. பயன்படுத்தி பார்த்து அது வெற்றி அடைந்தது தாங்கள் சொன்னால் இனி ஒவ்வொரு மாத ராசி பலனிலும் இதை கொடுக்கலாம் என நினைக்கிறோம்.

இந்த வைகாசி மாதத்தில் வலுவான கிரஹம் மூன்று அவை

சுக்ரன் – 1.60%,

சனி –  1.41%

செவ்வாய் – 1.38%

உங்கள் தனிப்பட்ட ஜாதகம் அதில் மேற்படி கிரங்கள் வலிவாக இருந்தால் அவை தரும் பலன்கள் அதிகமாயும், வலுவற்று இருந்தால் குறைவான பலனும் இருக்கும். மேலும் மற்ற கிரஹங்கள் ஓரளவு சாதகம். இவையும் ஜனன ஜாதகத்தில் நன்றாக இருந்தால் பெரிய கெடுதல்கள் இருக்காது.

இனி ஒவ்வொரு ராசிக்கான பலன்களை பார்ப்போம் :

மேஷ ராசி

மேஷ ராசி : (அஸ்வினி 4 பாதம், பரணி 4 பாதம் மற்றும் கிருத்திகை 1ம் பாதம் முடிய) :

உங்கள் ராசி நாதன் 01.06.21 வரை ராசிக்கு 3ல் குரு பார்த்தும் பின் மாத கடைசி வரை 4லிலும் இருக்கிறார். செவ்வாய்,குரு,புதன்,சுக்ரன் இவர்கள் நிறைய நன்மையை செய்கிறார்கள் சனி 10ல் கெடுதல் செய்யவில்லை சுமாரான பலனை தருகிறார். பொதுவாக வீடு நிலம் வாங்கவோ அல்லது வண்டிவாங்கவோ திட்டம் இட்டு இருந்தால் அது நிறைவேறும் மாதம் இது. புதிய வேலைக்கு மனு போட்டிருந்தால் அது கிடைக்கும் அதன் மூலம் இடமாற்றம் இருக்கும் உத்தியோகம் ஜீவனம் மிக நன்றாக இருக்கும். பொருளாதார ஏற்றம் இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் தடை பட்ட திருமணம் கைகூடுதல் குழந்தை பாக்கியம், புதிய ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். உங்கள் நீண்டகால கனவுகள் நிறைவேறும் வாய்ப்புகள் அதிகம். சூரியன் கண், உஷ்னம் இவற்றால் பாதிப்பு, மன சஞ்சலம், எதிர்பாராத பொருள் இழப்பு,  8ல் கேது உறவுகள் குடும்ப அங்கத்தினர்கள் உடல் பாதிப்பு மருத்துவ செலவுகள் கூடுதல் 2ல் ராகு மற்றும்,2ல் வக்ரியாகும் புதன் இவர்கள் உத்தியோகத்தில் இடையூறுகள் தொழிலில் ஒரு மந்த நிலை கொடுப்பர். இங்கு கொடுக்கப்பட்ட நல்ல நாள் தவிர மற்ற அனைத்து நாளும் கொஞ்சம் கவனம் நிதானம் யோசித்து செயல்படுதல் பெரியோர்கள் ஆலோசனை என்று இருந்தால் நிச்சயம் நன்மை உண்டாகும். பொதுவாக இடமாற்றம் அதன் மூலம் சில நன்மை உண்டாகவும். பெரும்பாலும் மகிழ்ச்சியே அதிகம் இருக்கும். மற்ற கிரஹங்களின் வலிமை மேஷ ராசியை பொருத்தவரை குறைவாக இருப்பதால் பெரிய சங்கடங்கள் இருக்காது.

நல்ல நாட்கள் பார்க்கும் விதம் (தினசரி காலண்டரில் நக்ஷத்திரம் போட்டிருக்கும் அதில் கீழே உங்கள் நக்ஷத்திரத்துக்கு நேரே கொடுத்து இருக்கும் நக்ஷ்த்திரங்கள் வரும் நாளில் மரண யோகம் இல்லாத நாள் நல்ல நாள்)

அஸ்வினிக்கு :– ரோஹினி,ஹஸ்தம், பூசம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி , ரேவதி

சந்திராஷ்டமம் : அனுஷம் – 26.05.21 – இரவு 02.40 மணி வரை

பரணிக்கு : – உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், அவிட்டம், சித்திரை, புனர்பூசம், ரேவதி, மகம், மூலம், அஸ்வினி

சந்திராஷ்டம்ம் : கேட்டை – 27.05.21 – இரவு 01.10 மணி வரை

கிருத்திகை :- ரோஹினி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி,சதயம்,பூசம் அனுஷம், உத்திரட்டாதி, மகம் , மூலம் அஸ்வினி

சந்திராஷ்டமம்: மூலம் – 28.05.21 – இரவு 11.38 மணி வரை

மற்ற நாட்களில் கவனம் தேவை முயற்சிகளை ஒத்திப்போடுவது நன்மை தரும்.

வணங்கவேண்டிய தெய்வமும்  நல்ல செயல்களும் : மதுரை மீனாக்ஷி சொக்கனாதர் அல்லது உங்கள் குலதெய்வம் இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். வீட்டிலேயே காலை மாலை இருவேளையும் ஸ்வாமி அறையில் விளக்கேற்றி இறைவனின் பெயரை உச்சரியுங்கள். அன்னதானம் வஸ்திர தானம் இவையும் இயலாதோர் வயோதிகர்கள் இவர்களுக்கு உடல் ஒத்துழைப்பு நல்குதல் நன்மை தரும்.

சார்வாரி வருஷ புத்தாண்டு பலன்

ரிஷபராசி : (கார்த்திகை 3பாதம், ரோஹிணி 4பாதம் , மிருகசீரிடம் 2 பாதங்கள் முடிய):

ராசிநாதன் மட்டுமே பூரா மாதம் முழுவதையும் சமாளிக்க வைக்கிறார். ஆனால் அவர் மிகுந்த வலிமையாக மாத ஆரம்பத்தில் இருக்கிறார். செவ்வாய் 02.06.21 முதல் பொருளாதாரத்தில் மேம்பாட்டை தருகிறார். பொதுவாக உங்கள் முயற்சிகள் மிகுந்த பிரயத்தனத்துக்கு பின் வெற்றி அடையும். கீழே கொடுக்கப்பட்டுள்ள நல்ல நாட்களில் உங்கள் முயற்சிகள் பயணங்களை வைத்து கொள்ளுங்கள். இந்த மாதம் சிக்கனம் அவசியம், பொறுமை நிதானம் அவசியம், சனி பார்வை ஓரளவு நன்மை செய்யும் மற்றபடி வைத்திய செலவுகள், உங்களுடையது, வாழ்க்கை துணை, பெற்றோர்கள் என்று அதிகப்படியாகும் மன உளைச்சல் வீண் பிரயான அலைச்சல் என்றும் இருக்கும். இருந்தாலும் அமைதியும் மூத்தோர்கள் யோசனை படி நடத்தலும் துன்பத்தை குறைக்கும். கிரஹவலிமைகள் பாதகமாக இருப்பதால் யோசித்து நல்ல நாளாக பார்த்து எதையும் ஆரம்பிக்கவும். வருமானத்தில் குறைவு ஏற்படும் சொந்த தொழில் மந்தமாக இருக்கும் உத்தியோகத்தில் விரும்பாத இடமாற்றம் அல்லது வேலை இழப்பு என்றுகூட வரலாம். எவருடனும் மோதல் போக்கு வேண்டாம். புதிய முயற்சிகளை ஒத்தி போடுவது நன்மை தரும். பொதுவாக சுமார் மாதம். சுக்ரன் 29.05.21 க்கு பின் மிதுனராசி செல்வது கொஞ்சம் வலிமை குறைவு. மன வருத்தங்களை அதிகம் தரலாம். தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் ஓரளவு துன்பம் குறைவாக இருக்கும்.

நல்ல நாட்கள் பார்க்கும் விதம் (தினசரி காலண்டரில் நக்ஷத்திரம் போட்டிருக்கும் அதில் கீழே உங்கள் நக்ஷத்திரத்துக்கு நேரே கொடுத்து இருக்கும் நக்ஷ்த்திரங்கள் வரும் நாளில் மரண யோகம் இல்லாத நாள் நல்ல நாள்)

கிருத்திகை 3 பாதங்கள்:- ரோஹினி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி,சதயம்,பூசம் அனுஷம், உத்திரட்டாதி, மகம் , மூலம் அஸ்வினி

சந்திராஷ்டமம்: மூலம் – 28.05.21 – இரவு 11.38 மணி வரை

ரோஹிணி 4 பாதங்கள் : மிருகசீரிடம், சித்திரை,அவிட்டம், புனர்பூசம், ரேவதி, உத்திரம் உத்திராடம்

சந்திராஷ்டமம் : பூராடம் – 29.05.21 – இரவு 10.44 மணி வரை

மிருகசீரிடம் 2 பாதங்கள் : ஸ்வாதி, சதயம், பூசம் அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம், அஸ்வினி, உத்திரம், அஸ்தம், திருவோணம், ரோஹிணி

சந்திராஷ்டமம்: உத்திராடம் – 30.05.21 – இரவு 09.57 மணி வரை

மற்ற நாட்களில் கவனம் தேவை முயற்சிகளை ஒத்திப்போடுவது நன்மை தரும்.

வணங்கவேண்டிய தெய்வமும் & நற்செயல்களும் : திருஆனைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர், மற்றும் குல தெய்வ வழிபாடு, வீட்டில் பூஜை அறையில் இருவேளையும் விளக்கேற்றி தியானம் செய்வது, ஏழை எளியோருக்கு அன்னதானம், வஸ்திரதானம், சரீரத்தினால் இயன்ற உதவி, இனிமையான பேச்சு இவை நன்மை தரும்.

மிதுனராசி : (மிருகசீர்டம் 2 பாதங்கள், திருவாதிரை 4 பாதங்கள், புனர்பூசம் 3 பாதங்கள் முடிய) :

உங்கள் ராசிநாதன் புதனை விட, சுக்ரன் செவ்வாய் குரு மாதம் முழுவதும் நல்லபனை அள்ளி தருகிறார்கள். ராசிநாதன் 27.05.21 – 02.06.21 வரை ராசியில் சஞ்சாரம் பின் திரும்ப வக்ரியாக 12ல் அப்பொழுது நன்மைகளை செய்கிறார். மேலும் பொதுவாக அஷ்டம சனி (8ல் இருக்கிறது) கஷ்டம் தரும் என்பார்கள் ஆனால் அவர் சந்திரனின் நக்ஷத்திரத்தில் மாதம் முழுவதும் சஞ்சரிப்பதாலும், ஜென்மத்தில் இருக்கும் செவ்வாய் 02.06.21 வரை குருவின் பார்வையால் வீடு வாகன யோகங்கள் வருமான ஏற்றம் நினைத்த செயல்கள் நிறைவேறுதல், விரும்பிய இடமாற்றம் சேமிப்பு இவற்றை தருகிறார். 02.06.21 முதல் ராசிக்கு 2ல் நீசம் சனியின் பார்வை பெற்று ராஜ யோகமாக குடும்பத்தில் மகிழ்ச்சி தடைபட்ட சுபகாரியங்கள் நிறைவேறுதல்,சொந்த தொழில் அல்லது உத்தியோகத்தில் உயர்ந்த நிலை அடைதல், இப்படி இவர் தருவதும், சுக்ரன் 12லும் ராசியிலுமாக மாதம் முழுவதும் பெண்களால் நன்மை, ஆடை ஆபரண சேர்க்கை தீர்த்த யாத்திரைகள், விருந்து கேளிக்கைகள், 9ல் இருக்கும் குரு வெளி நாட்டு பயணம் அல்லது வெளிநாட்டிலிருந்து ஆதாயம், முன்னோர்கள் ஆசீர்வாதம், குழந்தைகளால் பெருமை, புத்திரபாக்கியம், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பலவழிகளில் முன்னேற்றம், பண லாபம் என்று மகிழ்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் மற்ற சூரியன், ராகு அவ்வப்போது சந்திரன், உடல் உபாதை, குடும்பத்தினர் வைத்திய சிலவு, பெரியோர்களிடம் பகை, உறவினர்களால் தொல்லை என்று இருந்து கொண்டிருக்கும். ஆனால் சமாளித்து விடுவீர்கள் பொதுவில் இந்த மாதம் நன்மைகள் அதிகம்.

நல்ல நாட்கள் பார்க்கும் விதம் (தினசரி காலண்டரில் நக்ஷத்திரம் போட்டிருக்கும் அதில் கீழே உங்கள் நக்ஷத்திரத்துக்கு நேரே கொடுத்து இருக்கும் நக்ஷ்த்திரங்கள் வரும் நாளில் மரண யோகம் இல்லாத நாள் நல்ல நாள்)

மிருகசீரிடம் 2 பாதங்கள் : ஸ்வாதி, சதயம், பூசம் அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம், அஸ்வினி, உத்திரம், அஸ்தம், திருவோணம், ரோஹிணி

சந்திராஷ்டமம்: உத்திராடம் – 30.05.21 – இரவு 09.57 மணி வரை

திருவாதிரை 4 பாதங்கள் : புனர்பூசம், ரேவதி, அஸ்தம், ரோஹினி, அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை

சந்திராஷ்டமம்: திருவோணம் – 31.05.21 – இரவு 09.34 மணி வரை

புனர்பூசம் 3 பாதங்கள்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம், அஸ்வினி, உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, ஸ்வாதி, சதயம்

சந்திராஷ்டமம்: அவிட்டம் -01.06.21 – இரவு 09.38 மணி வரை

மற்ற நாட்களில் கவனம் தேவை முயற்சிகளை ஒத்திப்போடுவது நன்மை தரும்.

வணங்கவேண்டிய தெய்வமும் & நல்ல செயல்களும் : ஸ்ரீசுதர்ஸன சக்ரத்தாழ்வார் & குல தெய்வம் , இல்லத்தில் பூஜை அறையில் இருவேளையும் விளக்கேற்றி இறைவனின் பெயரை உச்சரித்தல், அன்னதானம், கல்வி தானம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல், மேலும் திருநங்கையருக்கு உதவுவது சனி மற்றும் புதன் கிரஹத்தால் நன்மையை அடைய உதவும்.

கடக ராசி
கடக ராசி

கடகம் : (புனர்பூசம் 4ம்பாதம், பூசம் 4பாதம், ஆயில்யம் 4பாதம் முடிய) :

மாதம் தொடங்கும்போது ராசிநாதன் சந்திரன் 12ல் ஆனால் உங்களுக்கு உங்கந்த நக்ஷத்திரத்தில் பயணிக்கும் போது உங்களுக்கு மிகுந்த நன்மை உண்டாகும். மேலும் செவ்வாயும், லாபத்தில் இருக்கும் சுக்ரன்,சூரியன்,ராகு மற்றும் மாத முற்பகுதியில் புதன் என்று நன்மைகள் அதிகமாக இருக்கு. 7ல் சனி வாழ்க்கை துணைவர் மூலம் பொருளாதார ஏற்றம் தருகிறார். அவரின் 3ம் பார்வை தொழில் விருத்தி உத்தியோகத்தில் உயர்வு என இருக்கிறது. புதிய திட்டங்கள் நிறைவேறும், பண வரவு தாராளம், புதிய இடமாற்றம், வீடுவாகன யோகம், ஆடை ஆபரண சேர்க்கை, உறவினர்கள் நண்பர்களால் நன்மை மகிழ்ச்சி முக்கியமாக பெண்களால் ஆதாயம், விருந்து கேளிக்கைகள், திருமணம் கைகூடுதல், செலவுகள் அதிகரித்தாலும் வரவும் அதே அளவு இருப்பதால் பெரிய சிரமங்கள் இருக்காது. அதே நேரம் 8ல் குரு மன உளைச்சல், முன்னேற்ற தடை என கொடுக்கும். பார்வையால் நன்மை தருவதால் கவலை வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் குழந்தைகள் உடல் ஆரோக்கியம், கல்வி இவற்றில் கவனம் தேவை 5ல் கேது, மற்றபடி உங்கள் செயல் திட்டங்கள் நிறைவேறுவதில் சிக்கல்கள் அதிகம் இருக்காது. எதிரிகள் தொல்லை குறைவு. வேலை மாற்றம் வேண்டுவோர் அது கிடைக்கும் சொந்த தொழில் விரிவாக்கம் செய்ய ஏற்ற மாதம். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்ட நல்ல நாளில் தங்கள் முயற்சிகளை ஆரம்பிக்கலாம் வெற்றி உண்டாகும். பொதுவில் நன்மை அதிகம். மற்ற கிரஹங்கள் வலிமை குறைவு அதனால் துன்பங்கள் என்பது குறைவாக இருக்கும்.

நல்ல நாட்கள் பார்க்கும் விதம் (தினசரி காலண்டரில் நக்ஷத்திரம் போட்டிருக்கும் அதில் கீழே உங்கள் நக்ஷத்திரத்துக்கு நேரே கொடுத்து இருக்கும் நக்ஷ்த்திரங்கள் வரும் நாளில் மரண யோகம் இல்லாத நாள் நல்ல நாள்)

புனர்பூசம் 4ம்பாதம் : பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம், அஸ்வினி, உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, ஸ்வாதி, சதயம்

சந்திராஷ்டமம்: அவிட்டம் -01.06.21 – இரவு 09.38 மணி வரை

பூசம் 4 பாதங்கள் : ரேவதி, அஸ்தம், திருவோணம்,ரோஹிணி, ஸ்வாதி, புனர்பூசம்

சந்திராஷ்டமம்: சதயம் -02.06.21 – இரவு 10.10 மணி வரை

ஆயில்யம் 4 பாதங்கள்: மகம், மூலம், அஸ்வினி, உத்திரம், உத்திராடம், அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், அனுஷம், உத்திரட்டாதி, பூசம்

சந்திராஷ்டமம் : பூரட்டாதி – 03.06.21 – இரவு 11.12 மணி வரை

மற்ற நாட்களில் கவனம் தேவை முயற்சிகளை ஒத்திப்போடுவது நன்மை தரும்.

வணங்கவேண்டிய தெய்வமும் & நற்செயல்களும் : உண்ணாமுலை அம்பிகை உடனுறை அண்ணாமலையார் & குல தெய்வம் . உங்கள் பூஜை அறையில் விளக்கேற்றி சிவ நாமத்தை உச்சரியுங்கள் , முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள் உடல் வலு குறைந்தோர் இயலாதோர்க்கு உடலால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்.

சிம்மம் : (மஹம் 4பாதங்கள், பூரம் 4 பாதங்கள், உத்திரம் 1ம் பாதம் முடிய) :

ராசிநாதன் சூரியன் 10ல், செவ்வாய் சந்திரன் 11ல், குரு 7ல், ராகு 10ல், சனி 6ல் என்று அமர்க்களமாக நன்மை தரும் கிரஹங்கள் வலுவாக இருக்கு. உங்கள் திட்டங்கள் நிறைவேறும். உடல் பிணிகள் நீங்கும். வழக்குகள் இருந்தால் சாதகம் ஆகும், உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பளஉயர்வு, இடமாற்றம் என்று கிடைக்கும். சொந்த தொழில் செய்யும் அனைவருக்கும் எதிரிகள் மறைந்து லாபம் வரும். மேலும் எதிர்பார்த்த வங்கி கடன், தொழில்விஸ்தரிப்பு, அரசாங்க உதவி என்று அனைத்தும் கிடைக்கும், புகழ் பாராட்டு இருக்கும். அனைவருக்கும் ஜீவன வகையில் நல்ல முன்னேற்றமும் பணப்புழக்கம் தாராளமாக இருந்து தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் தடைபட்ட திருமண ஏற்பாடுகள் கைகூடுதல் பிள்ளை வழியில் சந்தோஷம் புகழ், கணவன் மனைவி ஒற்றுமை உறவுகள் நெருக்கம் என்று எல்லாம் இருக்கும் விருந்து கேளிக்கைகள், புதியவீடுவாகனம், ஆடை ஆபரண சேர்க்கை என்று நன்றாக இருக்கும் அதே நேரம் 10ல் இருக்கும் குடும்பம் & லாபாதிபதி புதன் மாத மத்தியில் 27.5.21 – 02.06.21 வரை ஓரளவு நன்மை தரும் மற்ற சமயங்களில் குழப்பம் ஞாபக மறதி அவசரப்படுதல், ஆரோக்கிய பாதிப்பு, குடும்பத்தில் சிறுசிறு சண்டைகள் 4ல் கேது மன உளைச்சல், தூக்கம் இன்மை தேவையில்லாத தொல்லை, வாகனத்தால் காயம் என்று சங்கடங்களை கொடுக்கும். இருந்தாலும் 3க்குடையவர் ஆட்சியாக பத்தில் பலமாய் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள் பொதுவில் இந்த மாதம் மிகுந்த நன்மைகள் உண்டாகும்.

நல்ல நாட்கள் பார்க்கும் விதம் (தினசரி காலண்டரில் நக்ஷத்திரம் போட்டிருக்கும் அதில் கீழே உங்கள் நக்ஷத்திரத்துக்கு நேரே கொடுத்து இருக்கும் நக்ஷ்த்திரங்கள் வரும் நாளில் மரண யோகம் இல்லாத நாள் நல்ல நாள்)

மஹம் 4 பாதம் : ரோஹிணி, அஸ்தம், திருவோணம், ஸ்வாதி,சதயம், பூசம், அனுஷம், ரேவதி

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி – 04.06.21 – இரவு 12.44 மணிவரை

பூரம் 4 பாதம் : உத்திரம், உத்திராடம்,மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், மகம் , மூலம், அஸ்வினி

சந்திராஷ்டமம்: ரேவதி – 05.06.21 – இரவு 02.41 மணி வரை

உத்திரம் 1ம் பாதம் : ரோஹிணி, அஸ்தம், திருவோணம், ஸ்வாதி,சதயம், பூசம் அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம்

சந்திராஷ்டமம்: அஸ்வினி -06.06.21 – அதிகாலை 05.00 மணி வரை

மற்ற நாட்களில் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது

வணங்கவேண்டிய தெய்வம் & நல்ல செயல்கள் : தக்ஷினாமூர்த்தி, சூரிய நாராயணர் & குலதெய்வ வழிபாடு. வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி தக்ஷினாமூர்த்தி ஸ்லோகங்கள் அல்லது ஆதித்ய ஹ்ருதயம் படிப்பது நல்லது. முடிந்த அளவு அன்னதானம், வஸ்திரதானம், குழந்தைகள் படிக்க உதவி, ஏழைகளுக்கு மருத்துவ உதவி போன்றவை நன்மை தரும்.

கன்னி : (உத்திரம் 3 பாதங்கள், ஹஸ்தம் 4 பாதங்கள் , சித்திரை 2 பாதங்கள் முடிய) :

நவக்ரஹங்களில் ஒற்றை கிரஹமாக ராகு 10ல் இருந்து பணவருவாயை தந்து வாழ்க்கையை சமாளிக்கும்படி செய்கிறார். ராசிநாதன் புதன் சஞ்சாரம் கெடுபலன் இல்லை ஆனால் பெரும் உபகாரம் இல்லை உத்தியோகத்தில் ஒரு பின்னடைவு சொந்த தொழிலில் மந்தம் என செய்கிறார். சனி 11ம் இடமான லாபஸ்தானத்தை 7ம் பார்வையாக பார்த்து லாபத்தை செய்கிறார். 29.5.21 முதல் சுக்ரனும்,02.06.21 முதல் செவ்வாயும் நன்மை செய்கின்றனர். பொதுவில் மற்ற கிரஹங்கள் பலவித உபாதைகளை செய்கிறது. வீன் பழி, வழக்குகள், தேவையற்ற விரயம், மருத்துவ செலவுகள் அதிகரித்தல், பெற்றோர்கள் வாழ்க்கை துணை வகையில் செலவுகள் ஒவ்வொரு திட்டமும் கடும் முயற்சிக்கு பின்னே நிறைவேறும். அதிலும் கூட சங்கடம் வரும். ஒவ்வொரு அடியையும் யோசித்து நிதானித்து பெரியோர்கள் நலம் விரும்புவோர் ஆலோசனை பெற்று செய்வதும், சிக்கனமாக இருப்பதும் நன்மை தரும். வேலையில் ஜீவன வகையில் பாதிப்பு இல்லை என்றாலும் வேலை பளு சக தொழிலாளிகளுடன் வீண் வாதம், சொந்த தொழிலில் மந்தம் தொழிலாளர்கள் வகையில் அரசுவகையில் தொந்தரவு என இருந்து கொண்டே இருக்கும். ஆயினும் ஒருபுறம் ராகுவால் வருமானம் வந்த வண்ணம் இருக்கும். கேது மன உளைச்சலை தரும். பிறந்த ஜாதக கிரஹ நிலைகள் ஓரளவாவது நன்றாக இருந்தால் பெரிய துன்பம் இல்லை இருந்தாலும் 3க்குடைய செவ்வாய் குருபார்வையும் பின் சனி பார்வையும் பெற்று மனோ திடத்தை தருவதால் இந்த மாதம் சமாளிப்பு பரவாயில்லை என்று சொல்லும்படி இருக்கும்.

நல்ல நாட்கள் பார்க்கும் விதம் (தினசரி காலண்டரில் நக்ஷத்திரம் போட்டிருக்கும் அதில் கீழே உங்கள் நக்ஷத்திரத்துக்கு நேரே கொடுத்து இருக்கும் நக்ஷ்த்திரங்கள் வரும் நாளில் மரண யோகம் இல்லாத நாள் நல்ல நாள்)

உத்திரம் 3 பாதங்கள் : ரோஹிணி, அஸ்தம், திருவோணம், ஸ்வாதி,சதயம், பூசம் அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம்

சந்திராஷ்டமம்: அஸ்வினி -06.06.21 – அதிகாலை 05.00 மணி வரை

ஹஸ்தம் 4 பாதங்கள் :  மிருகசீரிடம்,சித்திரை, அவிட்டம், புனர்பூசம், ரேவதி, உத்திரம், உத்திராடம்

சந்திராஷ்டமம்: பரணி – 07.06.21 – நாள் முழுவதும்

சித்திரை 2 பாதங்கள் : ஸ்வாதி,சதயம், பூசம்,அனுஷம், உத்திரட்டாதி,மகம் மூலம் அஸ்வினி, ஹஸ்தம், திருவோணம், ரோஹிணி

சந்திராஷ்டமம்: கிருத்திகை – 08.06.21 – 07.30 மணி முதல் 09.06.21 – 10.05 மணி வரை

மற்ற நாட்களில் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது

வணங்கவேண்டிய தெய்வம் & நல்ல செயல்கள் : குல தெய்வம் , கால பைரவர், துர்கை வழிபாடுகள் சிறந்தது மேலும் இல்லத்தில் இருவேளையும் பூஜை அறையில் விளக்கேற்றி இறைவனின் நாமத்தை சொல்வதும் முடிந்த அளவு தான தர்மங்களை செய்வதும். ஏழை எளியோருக்கு சரீர ஒத்தாசை செய்வதும் நலம் தரும். கூடியவரையில் மௌனம் விரதம் இருப்பதும் நலம் தரும்.

துலாம் : (சித்திரை 2 பாதங்கள், ஸ்வாதி 4 பாதங்கள், விசாகம் 3 பாதங்கள் முடிய):

ராசிநாதன் சுக்ரன் 29.05.21 வரை 8ல் சஞ்சரித்தாலும் ஆட்சியாக இருப்பதாலும், 5ல் கேது, 9ல் செவ்வாய், 8ல் புதன் மிகுந்த நன்மைகளை செய்கின்றன. இல்லத்தில் குழந்தை பாக்கியம், வேறு வீடு குடிபோகுதல், இல்லத்தில் எதிர்பார்த்து இருந்த திருமணம் போன்ற சுப நிகழ்வுகள், பொருளாதார ஏற்றம், தெய்வ அனுகூலம், எதிலும் வெற்றி நீண்ட கால கனவு நிறைவேறுதல் உத்தியோகத்தில் உயர்வு, தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைத்தல், பணப்புழக்கம் தாராளம், மனதில் மகிழ்ச்சி ஏற்படுதல், கணவன் மனைவி ஒற்றுமை, குழந்தைகளால் பெருமை, பெற்றோர்களின் ஆசீர்வாதங்கள் கிடைத்தல் சமூக அந்தஸ்து, வீடுவாகன் யோகங்கள், வழக்குகளில் வெற்றி தடைபட்டு வந்த வேலை வாய்ப்பு வருதல், வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலை , மகிழ்ச்சி பயணங்கள், உடல் பிணிகள் நீங்குதல் என்று நன்மைகள் அதிகம் இருக்கு. அதே நேரம் 2ல் கேது, 8ல் சூரியன்,ராகு இவர்கள் குடும்பத்தில் சலசலப்பு, சிறு பிரச்சனைகள் உறவுகள் மூலம், மருத்துவ செலவுகள், உத்தியோகத்தில் வேலை பளு, வீண் அலைச்சல், விபத்துகள் என்று தந்தாலும், குருவின் அருள் இருப்பதாலும் சனியின் பார்வை ராசிக்கு இருப்பதாலும் இவை விலகும் வழியும் தானே ஏற்படும். நல்லவர்கள் தொடர்பால் தேவைகள் பூர்த்தியாகுதல், திட்டமிட்ட வேலைகள் நிறைவேறுதல், பண சேமிப்பு தொழில் விஸ்தாரணம் என நன்மைகள் அதிகம் இருப்பதால் பெரிய கஷ்டங்கள் இல்லை. இந்த மாதம் நல்ல மாதம்.

நல்ல நாட்கள் பார்க்கும் விதம் (தினசரி காலண்டரில் நக்ஷத்திரம் போட்டிருக்கும் அதில் கீழே உங்கள் நக்ஷத்திரத்துக்கு நேரே கொடுத்து இருக்கும் நக்ஷ்த்திரங்கள் வரும் நாளில் மரண யோகம் இல்லாத நாள் நல்ல நாள்)

சித்திரை 2 பாதங்கள்: ஸ்வாதி,சதயம், பூசம்,அனுஷம், உத்திரட்டாதி,மகம் மூலம் அஸ்வினி, ஹஸ்தம், திருவோணம், ரோஹிணி

சந்திராஷ்டமம்: கிருத்திகை – 08.06.21 – 07.30 மணி முதல் 09.06.21 – 10.05 மணி வரை

ஸ்வாதி 4 பாதங்கள்:  புனர்பூசம், ரேவதி, அஸ்தம், திருவோணம், ரோஹிணி, மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

சந்திராஷ்டமம் : ரோஹிணி – 09.06.21 – காலை 10.05 முதல், 10.06.21- பகல் 12.34 மணிவரை

விசாகம் 3 பாதங்கள்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம் அஸ்வினி, உத்திரம், உத்திராடம், அவிட்டம், சித்திரை, ஸ்வாதி, சதயம்

சந்திராஷ்டமம் : மிருகசீரிடம் – 10.06.21 – பகல் 12.35 முதல் 11.06.21 – பிற்பகல் 02.50 மணி வரை

மற்ற நாட்களில் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது

வணங்க வேண்டிய தெய்வங்கள் & நல்ல செயல்கள் : யோக நரசிம்மர், குலதெய்வம், அனுமர் வழிபாடு நலம் தரும். வீட்டில் உங்கள் கையால் பூஜை அறையில் நரசிம்மருக்கு அல்லது குலதெய்வ படத்துக்கு விளக்கேற்றி ஸ்லோகங்களை சொல்லுங்கள். முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள் வறியவருக்கு மருத்துவ உதவிகளை செய்யுங்கள்

விருச்சிகம் : விசாகம் 4ம்பாதம், அனுஷம் 4 பாதங்கள், கேட்டை 4 பாதங்கள் முடிய):

 இந்த வைகாசி மாதத்தில் வலுவான கிரஹங்கள் சனி,சுக்ரன்,செவ்வாய். இவை உங்கள் ராசிக்கு சாதகமான நிலையில் அதனால் கடந்த கால துன்பங்கள் அனைத்தும் நீங்கி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ராசிநாதன் செவ்வாய் 8ல் இருந்தாலும் 02.06.21 வரை குரு பார்வை பெற்றும் பின் 9ம் இடம் பெயர்ந்து சனி பார்வை பெற்றும் நன்மைகளையும் மனோ திடமும் தருகிறது. வழக்குகள் தீர்வை நோக்கி நகரும். தடைபட்ட முயற்சிகளில் வெற்றி உண்டாகும். இல்லத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி உண்டாகும். 7ல் சுக்ரன் 29.05.21 வரை ஆட்சி கணவன் மனைவி ஒற்றுமை ஆடை ஆபரண சேர்க்கை, பெண்களால் நன்மை, பணவரவு, பின் 8ல் குருபார்வை பெற்று தெய்வ அனுகூலம் தீர்த்த யாத்திரைகள், இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் என்று நிறைய நன்மைகள் உண்டாகும். பொதுவாக உத்தியோகத்தில் உயர்வு, சொந்த தொழிலில் முன்னேற்றம், ஜீவன வகையில் வருமானம் பெருகுதல் என்று இருக்கும் அதே நேரம் 7ல் சூரியன்,புதன், ராகு, ஜென்மத்தில் கேது இவர்கள் முயற்சிகளில் தடை உத்தியோகத்தில் வேலை பளு, பயணத்தில் களைப்பு, சிறுகாயம் அடைதல் பெற்றோர் வகையில் மருத்துவ செலவு, வாழ்க்கை துணைவர் உடல் நலம் பாதிப்பு, பிள்ளைகளால் மனவருத்தம் ஏற்படுதல் என்றும் உண்டாகும் பொதுவில் நன்மை தீமை கலந்து இருக்கும் ஆனால் வலுவான செவ்வாய்,சனி,சுக்ரன் அவற்றை ஈடு செய்து தெம்பை கொடுத்து நன்மை உண்டாக்கும். கவலை வேண்டாம்.

நல்ல நாட்கள் பார்க்கும் விதம் (தினசரி காலண்டரில் நக்ஷத்திரம் போட்டிருக்கும் அதில் கீழே உங்கள் நக்ஷத்திரத்துக்கு நேரே கொடுத்து இருக்கும் நக்ஷ்த்திரங்கள் வரும் நாளில் மரண யோகம் இல்லாத நாள் நல்ல நாள்)

விசாகம் 4ம் பாதம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம் அஸ்வினி, உத்திரம், உத்திராடம், அவிட்டம், சித்திரை, ஸ்வாதி, சதயம்

சந்திராஷ்டமம் : மிருகசீரிடம் – 10.06.21 – பகல் 12.35 முதல் 11.06.21 – பிற்பகல் 02.50 மணி வரை

அனுஷம் 4 பாதங்கள்: ரேவதி, அஸ்தம், திருவோணம், ரோஹினி, ஸ்வாதி, சதயம், புனர்பூசம்

சந்திராஷ்டமம் : திருவாதிரை – 15.05.21 – காலை 07.22 முதல் 16.05.21 காலை 09.11 மணிவரை & 11.06.21- பிற்பகல் 02.50 மணி முதல், 12.06.21 – மாலை 04.43 மணி வரை

கேட்டை 4 பாதங்கள்: மகம், மூலம், அஸ்வினி, உத்திரம், உத்திராடம், அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை, அனுஷம், உத்திரட்டாதி, பூசம்

சந்திராஷ்டமம்: புனர்பூசம் – 16.05.21- காலை 09.12 மணி முதல், 17.05.21-  காலை 10.31 மணி வரை & 12.06.21-மாலை 04.43 மணி முதல் , 13.06.21 – மாலை 06.10 வரை

மற்ற நாட்களில் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது

வணங்கவேண்டிய தெய்வங்கள் & நற்செயல்கள் : கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர், குலதெய்வம், மற்றும் அங்காள பரமேஸ்வரி, வீட்டில் விளக்கேற்றி இறைவனின் நாமத்தை சொல்லி தியானம் செய்வதும். அன்னமிடுதல், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவுதல், மாற்றுத்திறனாளிக்கு சரீர ஒத்துழைப்பு இவை அதிக நன்மை தந்து சிரமங்களை குறைக்க உதவும்.

தனூர் : (மூலம் 4 பாதங்கள், பூராடம் 4 பாதங்கள், உத்திராடம் 1 பாதம் முடிய):

ராசிநாதன் குரு 3ல் இருந்து சுமாரான பலனை தந்தாலும் பார்வையால் நன்மை செய்கிறார். மாதம் முழுவதும் சூரியன், புதன்,சுக்ரன், ராகு, குருபார்வை பெற்ற செவ்வாய், மேலும்02.6.21 முதல் 8ல் சனி பார்வை பெற்று 12கேது என நன்மை தரும் கிரஹங்கள் அதிகம், பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும், நாள் பட்ட வியாதிகள் தீரும், குடும்பத்தில் வைத்திய செலவுகள் பெருமளவு குறையும்,கடந்த காலங்களில் ஏற்பட்ட வழக்குகளில் வெற்றி கிட்டும் உத்தியோகத்தில் உயர்வு, புதிய உத்தியோகம் கிடைத்தல், சொந்த தொழிலில் லாபம், எதிரிகள் தொல்லை மறைதல் வங்கி கடன் அரசாங்க உதவி கிடைத்தல், பணப்புழக்கம் தாராளம் தேவைகள் பூர்த்தியாகுதல், வீடுவாகன யோகங்கள், ஆடை ஆபரண சேர்க்கை, பெரியோர்கள் ஆசீர்வாதங்கள் குடும்பத்தில் ஒற்றுமை, பிள்ளைகளால் பெருமை, கல்வி செல்வம் புகழ் சமூக அந்தஸ்து என்று நன்றாகவே இருக்கும். 2ல் சனி குடும்பத்தில் சலசலப்புகள் இருந்தாலும் அவை தாமே விலகிவிடும். சனி பார்வை 8, 11 இவற்றுக்கு இருப்பதால் பணம் தாராளமாக இருந்து தேவைகள் கடன்கள் பூர்த்தியாகும். பொதுவில் துன்பங்கள் சிரமங்கள் குறைவு. சின்ன சின்ன பிரச்சனைகள் உத்தியோகத்தில் சொந்த தொழிலில் குடும்பத்தில் என இருந்தாலும் பெரிய பாதிப்பு தராது சமாளித்து விடுவீர்கள் இந்த மாதம் நன்மை அதிகம்.

நல்ல நாட்கள் பார்க்கும் விதம் (தினசரி காலண்டரில் நக்ஷத்திரம் போட்டிருக்கும் அதில் கீழே உங்கள் நக்ஷத்திரத்துக்கு நேரே கொடுத்து இருக்கும் நக்ஷ்த்திரங்கள் வரும் நாளில் மரண யோகம் இல்லாத நாள் நல்ல நாள்)

மூலம் 4 பாதங்கள்: ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம், ஸ்வாதி,சதயம், அனுஷம், உத்திரட்டாதி, ரேவதி

சந்திராஷ்டமம் : பூசம் – 17.05.21 – காலை 10.31மணிமுதல், 18.05.21 – காலை 11.21 மணி வரை & 14.06.21 – இரவு 07.07 மணி வரை

பூராடம் 4 பாதங்கள்: உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், அவிட்டம், சித்திரை, புனர்பூஸம், ரேவதி, மகம் , மூலம், அஸ்வினி

சந்திராஷ்டமம்:  ஆயில்யம் – 18.05.21 – காலை 11.21 மணி முதல் 19.05.21 – பகல் 11.43 மணி வரை

உத்திராடம் 1 பாதம்: ரோஹிணி, அஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மூலம், அஸ்வினி

சந்திராஷ்டமம்: மகம் – 19.05.21 – காலை 11.43 மணி முதல் 20.05.21 – காலை 11.36 மணிவரை

மற்ற நாட்கள் தவிர்க்க வேண்டியவை

வணங்கவேண்டிய தெய்வம் & நல்ல செயல்கள் : திருச்செந்தூர் செந்திலாண்டவர், குல தெய்வம், சாஸ்தா,  வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்தல் இறைவனின் பெயரை உச்சரித்தல், முடிந்த அளவு அன்னதானம், வஸ்திரதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி, ஏழைகளுக்கு மருத்துவ உதவி போன்ற தர்மங்களை செய்வது நன்மை தரும்.

மகரம்: (உத்திராடம் 3 பாதங்கள், திருவோணம் 4 பாதங்கள், அவிட்டம் 2பாதம் முடிய):

ராசிநாதன் சனிபகவான் ராசியில் ஆட்சி, பெரிய கஷ்டங்கள் இல்லை, மேலும் அவரின் 3,7,10 பார்வைகளால் அதிக நன்மை, 2ல் குரு பொருளாதாரத்தில் பெரிய வளர்ச்சி காணும் நேரம் இந்த மாதம் ஆகும், திருமணம் கைகூடுதல் குழந்தை பாக்கியம், 6ல் இருக்கும் செவ்வாய் பலமாக இருப்பதாலும் குரு பார்வை பெறுவதாலும் கடன், வியாதி, வழக்குகள் எதிரிகள் என்று எல்லாம் மறைந்து போட்டிகள் நீங்கி வெற்றிகள் அதிகரிக்கும் உத்தியோகத்தில் உயர்ந்த நிலை சிலருக்கு நல்ல வேலை கிடைத்தல், தொழிலில் லாபம், இதுவரை இருந்துவந்த தடைகள் நீங்குதல் சரக்குகள் விற்று தீருதல் புதிய வாய்ப்புகள் ஆர்டர்கள் கிட்டுதல், தொழில் விஸ்தரிப்பு இப்படி பல உண்டாகும். மேலும் 5ல் சூரியன் கெடுதல் செய்யவேண்டும் ஆனால் எதிரிஸ்தானம் பெறுவதால் நன்மை அதிகம் குழந்தைகளால் பெருமை குழந்தை பாக்கியம் உண்டாகுதல், பேர் புகழ் கூடுதல், கல்வியில் நல்ல நிலை, 5ல் புதன் சுக்ரன் சுகம் ஆடை ஆபரண சேர்க்கை விருந்து கேளிக்கைகள், விரும்பிய இடமாற்றம், சமூக அந்தஸ்து, 11ல் கேது பூமி நிலம்,வீடுவாகன் யோகங்கள், வருவாய் இரட்டிப்பாகுதல், தேவைகள் பூர்த்தியாகுதல் என்று பலமாக இருக்கும். 5ல் ராகு குழந்தைகளுக்கு மருத்துவ செலவு 7ம் இடத்தைப்பார்ப்பதால் வாழ்க்கை துணவருடன் சிறு சிறு சண்டை, வாழ்க்கை துணைவர் மருத்துவ செலவு, மேலும் 9ம் இடம் கேதுவால் பார்க்கப்படுவதால் பெற்றோர்வகையில் செலவுகள் என்று இருக்கும் மற்றபடி பெரும்பாலும் நன்மை என்பதாலும் பணபுழக்கம் தாராளம் என்பதாலும் இந்த மாதம் சிறப்பாகவே இருக்கும்.

நல்ல நாட்கள் பார்க்கும் விதம் (தினசரி காலண்டரில் நக்ஷத்திரம் போட்டிருக்கும் அதில் கீழே உங்கள் நக்ஷத்திரத்துக்கு நேரே கொடுத்து இருக்கும் நக்ஷ்த்திரங்கள் வரும் நாளில் மரண யோகம் இல்லாத நாள் நல்ல நாள்)

உத்திராடம் 3பாதங்கள்: ரோஹிணி, அஸ்தம், திருவோணம், ஸ்வாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மூலம், அஸ்வினி

சந்திராஷ்டமம்: மகம் – 19.05.21 – காலை 11.43 மணி முதல் 20.05.21 – காலை 11.36 மணிவரை

திருவோணம் 4 பாதங்கள்: மிருகசீரிடம், அவிட்டம், சித்திரை, புனர்பூசம், ரேவதி, உத்திரம், உத்திராடம்

சந்திராஷ்டமம்: பூரம் – 20.05.21 – காலை 11.36 மணி முதல் 21.05.21 – காலை 11.02 மணி வரை

அவிட்டம் 2 பாதங்கள்: ஸ்வாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி,மகம், அஸ்வினி, மூலம், உத்திராடம், அஸ்தம், திருவோணம், ரோஹிணி

சந்திராஷ்டமம்: உத்திரம் – 21.05.21 – காலை 11.02 மணி முதல், 22.05.21 – காலை 10.08 மணி வரை

மற்ற நாட்கள் தவிர்க்க வேண்டியவை

வணங்கவேண்டிய தெய்வங்களும் & நல்ல செயல்களும் : அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள், திருவரங்க நாதன், குலதெய்வம், வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி ஸ்லோகங்கள் சொல்வது. குலதெய்வ பெயரை இருவேளையிலும் உச்சரிப்பது போன்றவையும். அன்னதானம், வஸ்திர தானம் செய்தல், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு சரீர ஒத்தாசை போன்றவை நன்மை தரும்.

கும்பம் : (அவிட்டம் 2 பாதங்கள், சதயம் 4 பாதங்கள், பூரட்டாதி 3 பாதங்கள்):

புதன், சுக்ரன், 10ல் கேது மாதம் முழுவதும் நன்மை, வருமானம் பெருகும், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும், பணவருவாய் அதிகரிக்கும், 02.06.21க்கு பின் 6ல் செவ்வாய் மிகுந்த நன்மை பிணி விலகும், எதிரிகள் கடன்கள் மறையும், ஓரளவு சேமிப்பு இருக்கும். பொதுவாக பணம் அதிகம் வருவதால் செலவுகள் பற்றி அச்சம் இருக்காது உத்தியோகத்தில் சொந்த தொழிலில் பெரிய பாதிப்பு இல்லை, ஆனால் மற்ற கிரஹங்கள் ராசி நாதன் உட்பட நன்மை தரவில்லை, மருத்துவ செலவு, எதிர்பாராத விரயம், மன உளைச்சல், குடும்பத்தில் ஒற்றுமை இன்மை, முயற்சிகளில் தடை போன்றவை இருந்து கொண்டிருக்கும். வீண் பழி, தேவையில்லாத வழக்குகள் அவசரப்படுதல், மறதி, பொருள் இழப்பு இவை இருந்து கொண்டிருக்கும். உங்கள் ஜனன ஜாதகம் நன்றாக இருந்தால் இந்த தொல்லைகள் குறையும். பணத்தை சேமிக்க பழகுங்கள், பெரியோர்கள் யோசனை உங்களுக்கு நன்மை செய்பவர் யோசனை என்று அவர்கள் சொல்படி நடந்தால் பெரிய துன்பம் இல்லை, உத்தியோகத்தில் வேலை பளு அல்லது மதிப்பிழத்தல் என்பது இருக்கலாம் சக தொழிலாளி, மேலதிகாரி இவர்களோடு பகை வேண்டாம். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்கள் கீழே கொடுத்து இருக்கிற நல்ல நாளில் செய்யுங்கள் வேலை கிடைக்கும். சொந்த தொழில் செய்வோர் கணக்குவழக்குகளை சரியாக வைத்து கொள்ளவும், அரசாங்கத்தோடு மோதல் வேண்டாம். யாருடனும் விளையாட்டாக பேசாதீர்கள் அது தொந்தரவை உண்டாக்கி விடும். பொதுவில் இந்த மாதம் வெகு சுமார் கவனமுடனும் நல்லோர் சொல்படியும் நடந்தால் சமாளித்து விடலாம்.

நல்ல நாட்கள் பார்க்கும் விதம் (தினசரி காலண்டரில் நக்ஷத்திரம் போட்டிருக்கும் அதில் கீழே உங்கள் நக்ஷத்திரத்துக்கு நேரே கொடுத்து இருக்கும் நக்ஷ்த்திரங்கள் வரும் நாளில் மரண யோகம் இல்லாத நாள் நல்ல நாள்)

அவிட்டம் 2 பாதங்கள்: ஸ்வாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி,மகம், அஸ்வினி, மூலம், உத்திராடம், அஸ்தம், திருவோணம், ரோஹிணி

சந்திராஷ்டமம்: உத்திரம் – 21.05.21 – காலை 11.02 மணி முதல், 22.05.21 – காலை 10.08 மணி வரை

சதயம் 4 பாதங்கள்: புனர்பூசம், ரேவதி, திருவோனம், ரோஹினி, அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை

சந்திராஷ்டமம் : ஹஸ்தம் – 22.05.21 – காலை 10.08 மணி முதல், 23.05.21 – காலை 08.57 மணி வரை

பூரட்டாதி 3 பாதங்கள்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம், அஸ்வினி, உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், அவிட்டம், ஸ்வாதி சதயம்

சந்திராஷ்டமம்: சித்திரை – 23.05.21 – காலை 08.57 மணி முதல் 24.05.21 – காலை 07.02 மணி வரை

மற்ற நாட்கள் தவிர்க்க வேண்டியவை

வணங்கவேண்டிய தெய்வங்கள் & நல்ல செயல்கள்: கோதண்ட ராமர், எல்லை தெய்வங்கள் சாஸ்தா, கருப்பு, குல தெய்வம். வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது இறைவன் பெயரை இருவேளைகளிலும் 108 தடவை உச்சரிப்பது முடிந்த அளவு தான தர்மங்களை செய்வது ஏழைகளுக்கு மருத்துவ உதவிகளை செய்யுங்கள்

மீனம் : (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி 4பாதங்கள், ரேவதி 4 பாதங்கள் முடிய):

3ல் சூரியன்,ராகு,சுக்ரன்,11ல் சனி மாதம் முழுவதும் பலவித நன்மை இரட்டை வருவாய் எடுத்த செயல்களில் வெற்றி, உடல் பிணி நீங்குதல், புது மனை, வாகன யோகம் உத்தியோகத்தில் உயர்வு, சொந்த தொழிலில் வளர்ச்சி,அதிக லாபம், 12ல் ராசிநாதன் குரு சுப விரயங்கள், வீடு வாகன் பழுதுபார்த்தல் திருமணம் போன்ற விசேஷங்களுக்குசெலவு செய்தல் 4ல் இருக்கும் செவ்வாய் குரு பார்வை பெற்று வீடு வாகன யோகத்தையும், மன நிறைவையும் நண்பர்களால் ஆதாயம், குழந்தைகளின் கல்வி செல்வு என்று நன்மை அதிகம், போட்ட திட்டங்கள் அனைத்தும் ஈடேறும் மாதம். புதன், கேது கொஞ்சம் ஞாபக மறதி அசதி பிரயாண களைப்பு அவசரப்படுதல், என்று பெயருக்கு சில கெடுதல்கள் இருக்கும். பெரும்பாலும் நன்மையே, திருமண முயற்சிகள் கைகூடும், குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகும். புதிய வேலைக்கு வெளிநாட்டு வேலை, வெளிநாட்டு படிப்பு , உயர்கல்வி, புதிய வீடுவாங்கும் எண்ணம் புதிய தொழில் தொடங்கும் எண்ணம், இருக்கின்ற தொழிலை விஸ்தரிப்பு போன்றவை ஈடேறும். இந்த மாதத்தில் தொடங்க நினைப்பவர்கள் கீழ்கண்ட நல்ல நாட்களில் தொடங்கினால் வெற்றி உண்டாகும். பொதுவில் நன்மை அதிகம் உண்டாகும் மாதம்.

நல்ல நாட்கள் பார்க்கும் விதம் (தினசரி காலண்டரில் நக்ஷத்திரம் போட்டிருக்கும் அதில் கீழே உங்கள் நக்ஷத்திரத்துக்கு நேரே கொடுத்து இருக்கும் நக்ஷ்த்திரங்கள் வரும் நாளில் மரண யோகம் இல்லாத நாள் நல்ல நாள்)

பூரட்டாதி 4ம் பாதம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம், அஸ்வினி, உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், அவிட்டம், ஸ்வாதி சதயம்

சந்திராஷ்டமம்: சித்திரை – 23.05.21 – காலை 08.57 மணி முதல் 24.05.21 – காலை 07.02 மணி வரை

உத்திரட்டாதி 4 பாதங்கள்: ரேவதி, அஸ்தம், திருவோனம், ரோஹிணி, சதயம், புனர்பூசம்

சந்திராஷ்டமம் : ஸ்வாதி – 24.05.21 – நாள் முழுவதும்

ரேவதி 4 பாதங்கள் : மகம், மூலம், அஸ்வினி, உத்திரம், உத்திராடம், அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், அனுஷம், உத்திரட்டாதி, பூசம்

சந்திராஷ்டமம்: விசாகம் – 25.05.21 – நாள் முழுவதும்

மேலே குறிப்பிடாத நாட்களில் கவனம் தேவை யோசித்து செயல்படவேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வங்கள்: மதுரகாளி, அங்காளபரமேஸ்வரி, எல்லை தெய்வங்கள், & குல தெய்வம், வீட்டில் பூஜை அறையில் இருவேளையிலும் விளக்கேற்றி இந்த தெய்வங்களின் பெயரை 28,56,108 தடவை உச்சரித்து வரவேண்டும். முடிந்த அளவு தான தர்மங்கள் ஏழைகளுக்கு மருத்துவ உதவி, சரீர ஒத்தாசைகள் இவற்றை செய்தால் நன்மை உண்டாகும்.

!! சுபம் !!

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.