சமீபகாலமாய் நம்மில் பலரும் வாட்ஸ் அப்பில் இருந்து மற்ற செயலிகளுக்கு மாறிக்கொண்டிருக்கிறோம். அப்படி மாறுகின்ற பொழுது பலருக்கும் இருக்கும் பிரச்சனை சாட் ஹிஸ்டரி. எப்படி வாட்ஸ் அப் சாட் ஹிஸ்டரியை மற்ற செயலிகளுக்கு மாற்றுவது என பார்ப்போம்.
- முதலில் வாட்ஸ் அப் செயலியை ஓபன் செய்துகொள்ளவும்.
- எந்த சாட் ஹிஸ்டரியை மாற்ற வேண்டுமோ அந்த சாட் விண்டோவை ஓபன் செய்து கொள்ளவும்.
- பின் வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளை தொடவும்.
- அதில் “More” என்ற ஆப்ஷன் தேர்வு சேது பின் “Export Chat ” ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
- பின் “Share box ” ஓபன் ஆகும். அதில் எந்த செயலி வேண்டுமோ அதை தேர்வு செய்யவும். ( நான் டெலிகிராம் தேர்வு செய்தேன்)
- பின் அதில் எந்த சாட் விண்டோவில் இந்த சாட் ஹிஸ்டரி வரவேண்டுமோ அதை தேர்வு செய்யுங்கள்.நான் க்ரூப் சாட் எக்ஸ்போர்ட் செய்வதால் இங்கும் க்ரூப் ஓபன் செய்தேன்
- இப்பொழுது சாட் மெசேஜ் இம்போர்ட் ஆகும். சில நிமிடங்களில் மெசேஜ்கள் இங்கே வந்துவிடும்