வாட்ஸ் அப் க்ரூப் என்பது நமக்கு பிடித்த நண்பர்களுடன் நம் எண்ணங்களை பகிர பேசி மகிழவோ அல்லது உறவினர்களுடன் பேசவோ உபயோகம் செய்யலாம் அல்லது அலுவலக ரீதியாக ஒரு ப்ராஜெக்டில் இருப்பவர்கள் அப்டேட்டை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் நம் அனுமதி இல்லாமல் நமக்கு சம்பந்தம் / விருப்பமில்லாமல் பல்வேறு குழுக்களில் நம்மை இணைக்கும் பொழுது எரிச்சலும், வெறுப்பும்தான் வரும்.
நல்லவேளையாக நம்மை மற்றவர்கள் எந்த குழுக்களிலும் இணைக்காமல் இருக்க ஒரு வழி உண்டு. அது எப்படி என்று பார்ப்போம்.
1.வாட்ஸ் அப் ஸ்க்ரீனில் வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளை தொட்டு பின் “Settings” மெனுவிற்குள் செல்லவும்.
2. இப்பொழுது “Account” ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
3. பின் “Privacy” ஆப்ஷனை தேர்வு செய்து கீழே ஸ்க்ரோல் செய்க.
4. இப்பொழுது “Groups” ஆப்ஷனை தேர்வு செய்யவும்
5.இங்கு மூன்று ஆப்ஷன்கள் இருக்கும். இதில் கடைசி ஆப்ஷன் “My contacts except” இதை தேர்வு செய்தால் உங்கள் வாட்ஸ் அப் கான்டாக்டில் இருக்கும் அனைவரையும் காட்டும். அதில் அனைவரையும் தேர்வு செய்யவும். இதன்மூலம் உங்களை யாரும் எந்த குழுவிலும் சேர்க்க இயலாது.